இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Monday, May 16

இலியானா மீது தடை கோரி 3 தயாரிப்பாளர்கள் புகார், கால்ஷீட் தராமல் இழுத்தடிப்பு: சிக்கலில் நண்பன் படம்!

எக்கச்சக்கமான அட்வான்ஸ் வாங்கிக் கொண்ட பிறகும், படத்துக்கு தேதி தராமல் இழுத்தடித்த நடிகை இலியானாவுக்கு தெலுங்கு மற்றும் தமிழில் தொழில் ரீதியான தடையை விதிக்க வேண்டும் என்று பிரபல தயாரிப்பாளர் மோகன் நடராஜன் புகார் கொடுத்துள்ளார்.

மோகன் நடராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'விக்ரமனின் தெய்வ திருமகன்' படத்தில் நாயகியாக நடிக்க ரூ 35 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து இலியானாவை ஒப்பந்தம் செய்திருந்தாராம். ஆனால் இந்தப் படத்துக்குக் கொடுத்த அதே தேதிகளை, ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் தமிழ் ரீமேக் நண்பனுக்குக் கொடுத்து சொதப்பினாராம் இலியானா.

இதனால் கடுப்பான மோகன் நடராஜன், சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், "பேசிய சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகும், இலியானா கால்ஷீட் தராமல் இழுத்தடித்தார். எனக்குக் கொடுத்த கால்ஷீட்டை நண்பன் படத்துக்கு கொடுத்துள்ளார். இதனால் எனக்கு ஏகப்பட்ட நஷ்டம். வாங்கிய அட்வான்ஸையும் திருப்பித் தரவில்லை. போன் செய்தால், அதை எடுக்கக் கூட மறுக்கிறார். எனவே இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்க தடை விதிக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...