தமிழ் நாட்டில் நடப்பது திமுக ஆட்சியா, சன் டிவி ஆட்சியா என்று தேர்தலுக்கு முன்பே கேள்வி கேட்டவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். இவர் ஆதரவு தெரிவித்த அதிமுக வெற்றி பெற்றுவிட்டது. தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் ஆகிவிட்டார் இவர். இனிமேல் சன் டிவிக்கு படங்கள் கொடுக்கக் கூடாது என்றோ, விளம்பரங்களை குறிப்பிட்ட நிமிடங்களுக்கு மேல் செய்யக் கூடாது என்றோ கட்டுப்பாடு விதிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதல்லவா? பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவீர்களா என்று அவரிடம் கேட்டபோது கொந்தளித்துவிட்டார் அவர். நான் தப்பு நடந்தா அது தப்புன்னு சுட்டிக்காட்டுவேன். அவ்வளவுதான். பழி வாங்கும் நடவடிக்கை பற்றி பேசுவதற்கு இங்கு இடமே இல்லை என்றார் ஆவேசமாக. இல்லை இல்லைன்னாதான் இருக்கு இருக்குன்னு அர்த்தம் சினிமாவில். போக போக பார்க்கலாம் யார் யாருடன் மல்லுக்கட்டுறாங்கன்னு
Monday, May 23
பழிவாங்குவேனா…? ஏஸ்ஏசி பதில்
2:30:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment