பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, தம்பி, வாழ்த்துகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய சீமான் அடுத்து, விஜய்யை வைத்து "பகலவன்" என்ற படத்தை இயக்குகிறார். இப்படம் கடந்த ஆண்டே துவங்க இருந்தது. ஆனால் இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக அவதூறாக பேசியதற்காக சிறை சென்றார் சீமான். இதனால் இப்படம் தள்ளிபோனது. இந்நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த சீமான், விஜய்யை சந்தித்து "பகலவன்" படம் தொடர்பாக பேசினார். அவரும் படத்தை துவங்கலாம் என்று சொன்னார். ஆனால் இடையில் தமிழ சட்டசபை தேர்தல் வந்ததால், காங்கிரஸ்க்கு எதிராக பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டார் சீமான். இதனால் மீண்டும் தள்ளிபோனது பகலவன். இப்போது எல்லா வேலைகளையும் ஒத்திவைத்துவிட்டு, பகலவன் படத்திற்கான வேலையை துவங்கி இருக்கிறார் சீமான். முதற்கட்டமாக படத்திற்கான நாயகி மற்றும் தொழில் நுட்ப வல்லுனர் தேர்வில் இறங்கியுள்ளார் சீமான். பகலவனில் இரண்டு நாயகிகள். இதில் ஒருவராக பாவனாவை தேர்வு செய்திருக்கிறார் சீமான். பாவனா ஏற்கனவே சீமானின் வாழ்த்துகள் படத்தில் நடித்திருப்பதால் மீண்டும் அவரையே தேர்வு செய்திருக்கிறார். மற்றொரு நாயகியாக ஹன்சிகா மொத்வானி நடிப்பார் எனத் தெரிகிறது. தற்போது விஜய் "வேலாயுதம்" படத்தின் இறுதிகட்ட சூட்டிங்கிலும், நண்பன் படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பின்னர் பகலவன் படத்தில் நடிக்க இருக்கிறார். விஜய்யுடன், பாவனா நடிப்பது இதுவே முதல்முறை, அதேசமயம் சீமான் இயக்கத்தில் விஜய் நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
வேலாயுதம், நண்பன் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து நடிக்க இருக்கும் "பகலவன்" படத்தில் அவருக்கு ஜோடியாக பாவனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Monday, May 30
விஜய் - பாவனா இணையும் பகலவன்!
7:50:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment