சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுயா, அதன்பின்னர் மதுரை சம்பவத்தில் போலீஸ் அதிகாரியாக வந்து அசத்தினார். தமிழில் வாய்ப்பு இல்லாமல் போன நடிகைகளின் பட்டியலில் சேர்ந்து இருந்த அனுயாவுக்கு இப்போது அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன. தற்போது டைரக்டர் ஷங்கரின் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும், “நண்பன்” படத்தில் இலியானாவின் சகோதிரியாக நடிக்கிறார். “நண்பன்” படத்தை தொடர்ந்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் “நான்” படத்திலும் நடிக்க இருக்கிறார். நான் படத்தில் ஏற்கனவே திருதிரு துறுதுறு படத்தின் நாயகி ரூபா மஞ்சரி நடிக்கிறார், அவருடன் அனுயாவும் நடிக்கிறார்.
கோலிவுட்டில் சத்தமில்லாமல் முன்னேறி கொண்டு இருக்கிறார் நடிகை அனுயா. நண்பன், நான் என்று அடுத்தடுத்து இரண்டு படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்.
Tuesday, May 31
பிஸியான அனுயா!
1:45:00 PM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment