வேலாயுதம் படத்தில் பதினைந்து வில்லன்களாம். இவர்கள் அத்தனை பேருமே விஜய்யால் ஃபுட்பால் ஆட போகிற சினிமா வில்லன்கள். ஆனால் அவரது கண்ணுக்கு தெரியாத இன்னொரு வில்லனாக இருக்கிறது சூழ்நிலை. தமிழக அரசியலில் வருகிற 13 ந் தேதி என்ன முடிவு வருமோ, அதை பொருத்துதான் இருக்கிறது அவரது நிம்மதியும் வளர்ச்சியும். இந்த நேரத்தில் வேலாயுதம் படப்பிடிப்பையும் நிறுத்தி வைத்துவிட்டு அதே 13 க்காக காத்திருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர்.
ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கு படத்தை விற்றுவிட வேண்டாம் என்ற நிபந்தனையின் பேரில்தான் இந்த படத்தில் நடிக்கவே ஒப்புக் கொண்டாராம் விஜய். ஆனால் நடக்கிற நடப்புகள் யாவும் அவரது எண்ண ஓட்டத்திற்கு எதிர் திசையிலேயே இருக்கிறதாம். ஆனால் உறுதிபடுத்தப்படாத இந்த தகவல் உண்மையாகி விடக் கூடாதே என்பதற்காக தொடர் முயற்சியில் இருக்கிறாராம் விஜய்.
இதற்கிடையில் பொன்னியின் செல்வன் நின்று போனதால், அதற்காக ஒதுக்கிய தேதிகளை சீமானுக்கு கொடுக்கவும் நினைத்திருக்கிறாராம் விஜய். தகவலறிந்த சீமான் வட்டாரம் மகிழ்சியில் திளைக்கிறது
Wednesday, May 11
அடுத்த படம் சீமானுக்குதான்
3:33:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment