ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் முதன் முறையாக இளைய தளபதி விஜய் நடிக்கும் படம் வேலாயுதம். சச்சின் படத்திற்குப் பிறகு விஜயுடன் ஜோடி சேர்கிறார் ஜெனிலியா.
பத்திரிகையாளராக ஜெனிலியா நடிக்க,. மற்றொரு நாயகியாக வரும் ஹன்சிகா மோட்வானி கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறார். விஜயின் பாசமிகு தங்கையாக சரண்யா மோகன் நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசை அமைக்க, ஒளிப்பதிவு வேலையை ப்ரியன் கவனித்துக் கொள்ள, ஜெயம் ராஜாவின் தந்தையான மோகன் படத்தொகுப்பு வேலையை கவனிக்க இருக்கிறார்.
பால்காரராக வரும் விஜய் அநியாயத்தைக் கண்டு பொங்கி எழும் மனிதராக நடித்திருக்கிறாராம். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இத்திரைப்படத்தின் வேலைகள் விரைவில் நிறைவடைய இருக்கின்றன.
இருதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது
ஆகஸ்ட் மாதத்தில்
இப்படத்தை வெளியிட இருக்கிறார்களாம்.














0 Comments:
Post a Comment