
Thursday, May 19
அமீர், சீமான்: விஜய்யின் அடுத்த கால்ஷீட் யாருக்கு?
12:56:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)
அதிமுக ஆட்சிக்கு வந்ததில் குளுகோஸ் குடித்ததுபோல கூடுதல் தெம்பில் இருக்கிறார் விஜய். இனி தனது படங்களை வெளியிடுவதில் யாரும் குடைச்சல் கொடுக்கமுடியாது என்பதே அதற்கு காரணம். தற்போது ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜா இயக்கும் வேலாயுதம் படத்திலும், ஷங்கர் இயக்கிவரும் நண்பன் படத்திலும் நடித்துவருகிறார் விஜய். இதில் வேலாயுதம் முடிவடையும் தருவாயில் உள்ளது. நண்பன் பாதி முடிவடைந்த கட்டத்தில் இருக்கிறது. நண்பன் முடிவடைந்ததும் விஜய்யின் அடுத்த கமிட்மெண்ட் என்னவாக இருக்கும் என ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள். ஏற்கனவே சீமான் இயக்கத்தில் விஜய் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளது தெரிந்ததே. இடையில் அமீர் சொன்ன ஒன் லைனுக்கும் தலையாட்டியுள்ளார் விஜய். இன்னும் சில நாட்களில் அமீரை சந்தித்து முழு கதையையும் கேட்கப்போகிறாராம். ஆக நண்பனை முடித்துவிட்டு அமீர்,சீமான் இருவரில் யாருக்கு விஜய் முதலில் கால்ஷீட் தரப்போகிறார் என்ற கேள்வி இப்பொழுது கோடம்பாக்கத்தை வட்டமடித்து வருகிறது.
0 Comments:
Post a Comment