இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Wednesday, May 25

நண்பனின் நாயகி இலியானா எடுத்த சபதம்!

தெலுங்குத் திரையுலகில் நடிகையாக இருக்கும் இலியானா, அங்கு நடித்த படங்கள் எல்லாம் தோல்வியுற்றதால் வருத்தத்தில் இருந்தார். ஆனாலும் சற்றும் மனம் தளராமல் ‘நான் ஒரு வெற்றி நாயகியாக வலம் வரத்தான் போகிறேன்’ என்று சபதமெடுத்துள்ளார்.

தெலுங்கு கைவிட்டாலும் தற்போது ஷங்கர் இயக்கும் ‘நண்பன்’ தமிழ் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழை அடுத்து ஹிந்தியிலும் நடிக்க இருக்கிறார் இலியானா.
இந்நிலையில் தன்னுடைய அடுத்த படங்களைப் பற்றி இலியானா கூறியதாவது;
நான் நடித்த சில தெலுங்கு படங்கள் தொடர்ச்சியாக தோற்று விட்டன. அதற்கான காரணத்தை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு படத்திலும் கஷ்டப்பட்டுதான் நடிக்கிறேன். தமிழில் சங்கரின் இயக்கதில் நடித்து வருகிறேன். இப்படம் கண்டீப்பாக வெற்றி பெறும் என நம்புகிறேன்.
இதையடுத்து இந்திப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன். அதன் கதை என்ன, எனது கேரக்டர் எப்படிபட்டது என்பதை எல்லாம் இப்போது சொல்ல முடியாது. கூடிய விரைவில் நான் ஒரு வெற்றி நாயகியாக வலம் வரத்தான் போகிறேன்” என்றார்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...