வேலாயுதம் படத்துக்குப் பிறகு பகலவன் படத்தில் நடிப்பார் விஜய் என்று உறுதியாகச் சொல்லப்பட்டது. அதேபோல சுசிந்திரன் இயக்கும் ராஜபாட்டைக்குப் பிறகு விக்ரம் நடிக்க இருப்பது தரணி இயக்கத்தில் என்றார்கள். ஆனால் இரண்டுபேருமே புதுமுக இயக்குனர்களுக்கு அதிரடியாக வாய்ப்புக்களை கொடுத்திருகிறார்கள். விக்ரம் சுசீந்திரன் படத்தை தொடர்ந்து நடிக்க இருக்கும் படம் ‘கரிகாலன்’. இடைக்கால சோழ அரசனான கரிகாலனின் வாழ்கையில் நடந்ததாக வாய்மொழியாக சொல்லப்பட்டு வரும் கதையும் கற்பனையையும் கலந்து கிராஃபிக்ஸ் மற்றும் எஃபெக்ஸ் விருந்து படைக்க இருக்கிறார் அறிமுக இயக்குனர் கண்ணன்.
இவர் எந்திரன் உட்பட ஷங்கரின் பல படங்களில் கிராஃபிக்ஸ் இன்சார்ஜாக பணிபுரிந்தவர். அடுத்து விஜய் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் கண்டேன் என்ற படத்தை இயக்கிய முகில் என்பவரின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தை தயாரிக்க இருப்பவர் ஆர்.பி.சௌத்ரி. இந்தக்கதையில் இடம்பெற இருக்கும் குட்டி ப்ளாஷ் பேக்கில் விஜய் பல்லவ ராஜா வேஷம் போட இருக்கிறாராம்!
Saturday, May 21
புதியவர்களை நம்பும் விஜய், விக்ரம்!
4:05:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment