இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Monday, May 16

இலியானாவுக்கு இன்னொரு பிரச்னை..!

தமிழில் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து வருகிறார் இலியானா. இலியானாவுக்கு தெலுங்கு திரையுலகில் தான் பிரச்சனை என்றால் இப்போது தமிழ்த் திரையுலகிலும் 'தெய்வ திருமகள்' படத்தினால் பிரச்சனை வந்துள்ளது.

விக்ரம், அனுஷ்கா, அமலா பால் நடித்து வெளிவர இருக்கும் படம் 'தெய்வத்திருமகள்'. இப்படத்தில் அமலா பால் பாத்திரத்துக்கு முதலில் ஒப்பந்தம் ஆனவர் இலியானா.

இப்படத்தில் நடிப்பதற்கு முன்பணமாக 36 லட்ச ரூபாய் கொடுத்து இருக்கிறாராம் படத்தின் தயாரிப்பாளர் மோகன் நடராஜன். ஆனால் படத்தின் நடிக்கிறேன் என்று கூறிவிட்டு 'தெய்வத்திருமகள்' படத்திற்கு கொடுத்த தேதிகளை விஜய் நடிக்கும் 'நண்பன்' படத்திற்கு கொடுத்து விட்டாராம் இலியானா.

இலியானா நடிக்கப் போவது இல்லை என்று முடிவானவுடன் அமலா பாலை ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்து இருக்கிறார்கள்.

படத்தில் தான் நடிக்கவில்லையே, முன்பணமான கொடுத்த 36 லட்சம் ரூபாயை திருப்பி தாருங்கள் என தயாரிப்பு தரப்பு கேட்க, இலியானாவிடமிருந்து பதிலே இல்லையாம். ஆகையால் மோகன் நடராஜன் இப்போது தமிழ் தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டு, இலியானாவுக்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதித்து RED CARD கொடுக்கலாமா என்று ஆலோசித்து வருகிறாராம்.

அப்போ விஜய் நடித்த நண்பன் படத்தோட நிலைமை

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...