விஜய், ஹன்சிகா, ஜெனிலியா மற்றும் பலர் நடித்து வரும் வேலாயுதம். ஜெயம் ராஜா இயக்க ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து வருகிறார்.
இப்படம் குறித்து ஜெயம் ராஜா கூறியுள்ளது " வேலாயுதம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாகி வருகிறது. 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக பல கோடிகள் செலவழித்துள்ளார்.
படத்தின் ஒரு பாடலுக்காக இரண்டு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாம்.
வேலாயுதம் படத்தில் 15 வில்லன்கள் நடித்து இருக்கிறாகள். 6 சண்டை காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. படம் குறித்து, இயக்குனர் ஜெயம் ராஜா " வேலாயுதம் படத்தின் கதை அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதத்தில் இருக்கும். தன் தங்கை மீது விஜய் கொண்டிருக்கும் பாசத்தை மையமாகக் கொண்டு கதை நகரும். விஜய்யின் தங்கையாக சரண்யா மோகன் நடித்துள்ளார்.
விஜய், சந்தானம் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் சம்பந்தபட்ட காமெடி காட்சிகள் எடுக்கும்போது, படப்பிடிப்புத் தளத்தில் இருந்தவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. நிச்சயம் அந்த காட்சிகளுக்கு தியேட்டரில் நல்ல வரவேற்பு இருக்கும்..
விஜய் ஆண்டனி இப்படத்திற்காக சிறப்பாக பாடல்களை அமைத்து கொடுத்து இருக்கிறார். மொத்தம் உள்ள 5 பாடல்களில் 3 பாடல்கள் படமாக்கப்பட்டுவிட்டன. மீதம் உள்ள 2 பாடல்களை வெளிநாடுகளில் படமாக்க உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
விஜய் இதுவரை நடித்த படங்களிலே வேலாயுதம் படம் தான் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படமாம்.
Thursday, May 5
வேலாயுதம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாகி வருகிறது
5:29:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment