இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Tuesday, May 17

நண்பன் கதாநாயகியின் மூன்று ரகசிய ஆசைகள்





தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் கவர்ச்சி நடிகைகளில் பிரபல நடிகை இலியானா ஆவார். இவருக்கென்று மூன்று ரகசிய ஆசைகள் இருக்கிறதாம். ரகசியம் என்றால்தான் நமக்கு பொறுக்காதே... அவரிடம் தோண்டித் துருவி அந்த ரகசியங்களைத் தெரிந்து கொண்டோம்.

அந்த ரகசிய ஆசைகள் அப்படியே உங்களிடம்.

முதல் ஆசை: “சினிமாவில் சொந்தக் குரலில் பாடவேண்டும். இதற்காக முறைப்படி சங்கீதம் பயின்றிருக்கிறேன்.” இரண்டாவது ஆசை: “இசையினை கற்கும் போது, அதன் மேல் தீராக் காதல் வந்துவிட்டது. ஆதலால் ஐதராபாத்தில் இசைப்பள்ளி ஒன்று துவங்க வேண்டும்.”

மூன்றாவது ஆசை: “நடனம் மனதை மட்டுமல்ல, உடலையும் இளமையாகவும், மகிழ்ச்சியாகவும் ஆக்கும் வல்லமை படைத்தது. அதனால் ஒரு நடனப்பள்ளி நடத்தவேண்டும். இதுதான் இப்போதைக்கு என்னுடைய ரகசிய ஆசைகள்” என்றார். இவை எல்லாம் நல்ல ஆசைகள்தான் இலியானா. ரகசிய ஆசைகள்னு சொன்னீங்களா..? நாங்க வேற ஒண்ண சொல்லுவீங்கன்னு நினைச்சோம்..!

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...