இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Friday, May 13

ஜெயா டிவிக்கு கைமாறியது விஜய்யின் வேலாயுதம்!

'Velayudham's promos in Jaya TV







நடிகர் விஜய் - ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா நடித்து வரும் புதிய படம் வேலாயுதம். விஜய்யின் முந்தைய படமான காவலன் படத்திற்கு அப்போதைய ஆளும்கட்சியான திமுக எக்கச்சக்க தொந்தரவுகளை கொடுத்தது. படத்தை திரையிட விடாமல் தடுத்ததில் தொடங்கி, கட்-அவுட் கட்ட விடாமல் தடுத்தது வரை சிக்கல்களை சந்தித்த காவலன், எதிர்பார்த்ததை விட வெற்றியும் பெற்றது. அதனைத் தொடர்ந்து வேலாயுதம் பட சூட்டிங்கில் விஜய் பங்கேற்று வந்த நிலையில்தான் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தலில் அதிமுகவுக்கு விஜய் ரசிகர் மன்றம் பகிரங்க ஆதரவு தெரிவித்தது. விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர், அராஜக திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர விஜய் ரசிகர்கள் தேர்தல் பணியாற்ற வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில்தான் தேர்தல் முடிவு அதிமுகவுக்கு சாதகமாக வந்துள்ளது. முன்னணி நிலவரம் வெளியாக ஆரம்பித்ததில் இருந்தே ஜெயா டிவியில் விஜய்யின் வேலாயுதம் படத்தின் டிரைலர்கள் வெளியிடப்பட்டன. இறுதிகட்ட படப்பிடிப்பில் வேலாயுதம் என்ற விளம்பர வரிகளுடன் வெளியான அந்த விளம்பரம் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது. ‌வேலாயுதம் படத்தினை வாங்க பலரும் முயற்சி‌ செய்துவந்த நிலையில் அந்த படம் ஜெயா டிவிக்கு கைமாறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...