இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Friday, May 13

நான் நினைத்தது போல அதிமுக வென்றது மிக மிக மகிழ்ச்சி-நடிகர் விஜய்

மக்கள் நினைத்தது போல,நான் நினைத்தது போல அதிமுக பெரும் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.


திமுகவுக்கு எதிராக மிகத் தீவிரமாக செயல்பட்டவர்களில் நடிகர் விஜய்யும் ஒருவர்.

அதிமுக பெற்ற வெற்றி குறித்து விஜய்யிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ஆட்சி மாற வேண்டும், ஒரு மாற்றம் வர வேண்டும் என நான் நினைத்தேன். அதேபோல மக்களும் நினைத்துள்ளனர் என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபிக்கின்றன.

அதிமுக வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது. மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது என்றார் விஜய்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...