இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Tuesday, May 31

இரண்டாவது ஹீரோயினாக நடிக்க மாட்டேன்: ஹன்சிகா மொத்வானி

தெலுங்கிலிருந்து கோலிவுட் வந்த ஹன்சிகா மொத்வானி, மாப்பிள்ளை, எங்கேயும் காதல் ஆகிய

படங்களில் நடித்து பட உலகில் வரவேற்பை பெற்றார்.

இப்போது விஜய்யுடன் இணைந்து வேலாயுதம்

உதயநிதி ஸ்டாலின் உடன் ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திலும் நடித்து வருகிறார்.


தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நடிக்க களமிறங்கியுள்ள ஹன்சிகா ஹீரோயின் ரோலில் மட்டுமே நடிப்பேன். இரண்டாவது ஹீரோயின் ரோலில் நடிக்க மாட்டேன் என்று உறுதியான முடிவை எடுத்திருப்பதாக கூறுகிறார்கள்.


நான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த நாளில் இருந்து, இரண்டாவது ஹீரோயின் ரோலில் மட்டும் நடிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். நல்ல கேரக்டராக, ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும்படியான ரோலில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்.


தமிழில் நான் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் உற்சாகமடைந்துள்ளேன். தெலுங்கு பட வாய்ப்புகளும் வருகின்றன.


தில் ராஜு தெலுங்கில் எடுக்கும் படத்தில் ஹீரோ சித்தார்த்துடன் முன்னனி கதாநாயகியாக நடிக்கிறேன். கதாநாயகன் ராம் நடிக்கும் தெலுங்கு படத்தில் வரும் நாயகி ரோல் பேசப்படும் என்றும் ஹன்சிகா கூறியுள்ளாராம்.


0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...