இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Wednesday, May 25

வேலாயுதம் நாயகனை மயக்க ஹன்சிகா ஆட்டம்

இயக்குனர் பிரபு தேவா இயக்கிய “எங்கேயும் காதல்” படத்தில் நாயகன் ஜெயம் ரவியுடன் ஹன்சிகா இணைந்து நடித்துள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் கமெராமேன் நீரவ் ஷா, பிரபுதேவா இருவரும் ஹன்சிகாவின் அழகை புகழ்ந்து தாலாட்டியுள்ளார்கள். மேக்கப் இல்லாத, “கொழு கொழு” திம்சுக்கட்டை இயற்கை அழகை சிலாகிக்கும் விதத்தில் “தெர்மாகூல் அழகி” என்று செல்லப்பெயர் வைத்து அழைத்துள்ளார்களாம்.


இயக்குனர் ராஜேஷ் இயக்கும் “ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தில் நாயகனாக நடிக்கும் உதயநிதியை நாயகி ஹன்சிகா மொத்வானி உற்சாகமாக “ஜில்னு ஒரு நண்பன்” என்றே கூப்பிடுவாராம். படப்பிடிப்பு தளத்தில் சந்தானம் வாய்க்கு வந்தபடி அனைவரையும் நக்கல் பண்ணுவதையும் ஹன்சிகா ரசித்துள்ளாராம்.

ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல் படத்தில் நடித்த கதாபாத்திரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் விஜய் உடன் “வேலாயுதம்” படத்தில் நடித்துள்ளேன். செழிப்பான கிராமத்து பெண்ணாக இதில் வருகிறேன். வைதேகி என்ற பெயரில் ஆட்டம் ஆடி, விஜய்யின் மனதை கொள்ளையடிக்கிற கதாபாத்திரம்.

என் ஆட்டம் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும். விஜய்யுடன் சேர்ந்து ஆடுவது எனக்கு கனவாக இருந்தது. இப்போது நிறைவேறியுள்ளது என்றும் ஹன்சிகா மொத்வானி கூறியுள்ளாராம்

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...