இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Friday, May 20

நண்பனில் இலியானாவுக்கு ரூ.1.5கோடி சம்பளம்

த்ரிஷா நயன்தாரா உள்ளிட்ட தென்னிந்திய நடிகைகளை மிஞ்சிவிட்டார் நடிகை இலியானா. ஷங்கர் இயக்கத்தில், விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து வரும் இலியானாவுக்கு ரூ.1.5கோடி சம்பளம் தர ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாம். இதுவரை வேறு எந்தவொரு நடிகையும் இந்த சம்பளத்தை வாங்கியதில்லையாம்.
இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 3-இடியட்ஸ் படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் உருவாகி வருகிறது இப்படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்கி வருகிறார் இதில் ஹீரோக்களாக விஜய் ஸ்ரீகாந்த், ஜீவா ஆகிய மூன்று பேர் நடித்து வருகின்றனர். படத்தில் விஜய்க்கு ஜோடியாக இலியானா நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் ரூ.2கோடி ‌வரை சம்பளம் கேட்டு இருந்தார் ஆனால் ரூ.50லட்சத்தை குறைத்து ரூ.1.5 கோடி சம்பளம் தர ஒப்புக்கொண்டுள்ளனர் இலியானாவுக்கு அளிக்கப்பட்ட இந்த சம்பளம் தென்னிந்திய சினிமாவில் வேறு எந்தவொறு நடிகையும் வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளரர் ஒருவர், தன்னுடைய அடுத்த படத்தில் இலியானாவுக்கு ரூ.1.75கோடி வரை தருவதாக கூறியுள்ளார் அதேபோல் இந்தியிலும் அடுத்து நடிக்க இருக்கிறார் இலியானா இதில் தன்னுடைய சம்பளத்தை ரூ.2கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளார்

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...