இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Saturday, May 7

வேலாயுதம்தான் ஹீரோ.இவனுக்கு மக்கள்தான் ஹீரோ.

"
வி
ஜய் படமாயிற்றே.எவ்வளவு நாள் ஆசைக்குப் பிறகு கிடைத்திருக்கிறது.விடுவேனா, ஒரு அதிரடி கதையைச் செய்திருக்கிறேன்'' என்று உற்சாகமாய் பேசத் துவங்குகிறார் "ஜெயம் ராஜா"



''
'சந்தோஷ் சுப்ரமணியம்' பார்த்துட்டு, 'படம் நல்லாருக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணணும்' என்று சொன்னார் விஜய்.அதைத் தொடர்ந்துதான் இந்த வாய்ப்பு'' என்கிறார்.

விஜய்யின் வேலயுதம் படப்பிடிப்பு முடியும் நிலை உள்ளது...





விஜய் படங்கள் எல்லாமே அதிரடிதான்னு சொல்வாங்க. உங்க படத்துல என்ன விசேஷம்?

''தமிழ்நாட்டில் இருக்கும் ஏழு கோடிப் பேர்களில் ஒருவனாக இருக்கும் ஒருவன்,அந்த ஏழு கோடி மக்களுக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கிறவனாக, ஒரு ரியல் சூப்பர் ஹீரோவாக விஸ்வரூபம் எடுக்கும் கதை.சிம்பிளாக சொல்லவேண்டுமென்றால் மக்களுக்கு வேலாயுதம்தான் ஹீரோ.இவனுக்கு மக்கள்தான் ஹீரோ. அணு அளவிற்கு சிறியவனாக இருக்கும் இவனை சீண்டிப் பார்க்கும்போது அவன் தீய சக்திகளுக்கு எதிரான அணுஆயுதமாக எப்படி மாறுகிறான் என்பதுதான் விறுவிறுப்பான திரைக்கதையாக வந்திருக்கிறது.






எம்.ஜி.ஆரோட 'எங்க வீட்டுப்பிள்ளை' பார்த்திருக்கிறீர்களா? படம் எத்தனை சுறுசுறுப்பா விறுவிறுப்பா இருக்கும்... அப்படி ஒரு கதை.''

''விஜய்க்கு மீண்டும் ஜெனிலியா ஜோடியா... சச்சினுக்குப்பிறகு கூட்டு சேர்ந்திருக்கிறீர்கள்?''

''சந்தோஷ்சுப்ரமணியத்துல நடிச்சதுலருந்து ஜெனிலியா எங்க வீட்டுப்பெண்ணாக மாறிவிட்டார். அவர் ஒரு ஜோடி. இன்னொரு ஜோடி ஹன்ஸிகா மோத்வானி. பொதுவாய் கவர்ச்சி உடைகளில் வலம் வருபவரை பாவாடை தாவணியில் வலம் வரச் செய்திருக்கிறோம். பார்த்துவிட்டு எல்லோரும் சின்ன குஷ்பூ என்கிறார்கள். ஜெனிலியா பத் திரிகை நிருபரா நடிக்கிறார்.விஜய் ஆண்டனி கலக்கல் இசையைக் கொடுத்திருக்கிறார்.''

இன்று விஜய்க்குத் தேவை ஒரு மெகா ஹிட்.அதை மனதில் வைத்திருக்கிறீர்களா?

"'கதையை ஸ்ட்ராங்காக பிடி, எப்படியும் ஜெயித்தே தீரும் என்று முடிவான பிறகு ஷூட்டிங்கிற்கு போ' என்று எங்கள் அப்பா அட்வைஸ் செய்வார்கள்.அதிலிருந்து நான் இதுவரைத வறியதே இல்லை.

ரீமேக் படங்களுக்கு கூட நான் மூன்று மாதங்களாவது உட்கார்ந்து அந்தக் கதையை நமக்கு ஏற்றமாதிரி சரி செய்த பிறகே ஷூட்டிங்கிற்கு கிளம்புவேன். இந்தக் கதைக்கு விஜய்யைவிட வேறு சாய்ஸ் இல்லை.வேலாயுதம் ஹீரோயிஸ படங்களுக்கு ஒரு புது உதாரணமாக இருக்கும்.''


முதல்முறையாக உங்க அப்பா, தம்பி காம்பினேஷனைவிட்டு வெளியே வந்து படம் இயக்குகிறீர்கள். எப்படியிருக்கிறது?

"எனக்கு சினிமா புதியது இல்லை. நான் எடிட்டிங் ரூமில்தான் விளையாடியது அதிகம். அப்பாதான் எங்கள் குரு. சினிமாவை கற்றுக் கொடுத்தவர். எனக்கும், தம்பிக்கும் சினிமாவை அவர் கட்டாயப்படுத்தி திணிக்க வில்லை. இயல்பாகவே எங்களுக்கு சினிமா வந்தது. இது எனக்கு அடுத்த கட்டம்.தெரிந்த வித்தை என்பதால் புதிய ஆயுதங்களோடு களத்தில் இறங்கியிருக்கிறேன்.நிச்சயம் நிரூபிப்பேன்.''என்று நம்பிக்கையோடு சொல்கிறார் 'ஜெயம்'ராஜா.நம்பிக்கை இருந்தால் எல்லாமே ஜெயம்தான்.


நன்றி
"குமுதம்"

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...