மும்பை தொடர் குண்டு வெடிப்பு சதி செயலில் ஈடுபட்ட தாவூத் இப்ராகிம் வாழ்க்கை வரலாறு இந்தியில் படமாகிறது. இதில் தாவூத் இப்ராகிம் காதலியான நடிகை மந்தாகினி வேடத்தில் இலியானா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இவர் தற்போது ஷங்கர் இயக்கும் நண்பன் படத்தில் நடிக்கும் இலியானாவிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது.
அவர் கூறுகையில், "தாவூத் இப்ராகிம் வாழ்க்கை வரலாறு பட மாவதாகவும் அவரது காதலி வேடத்தில் நான் நடிப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்திப்படம் ஒன்றில் நடிக்கிறேன். அதன் கதை என்ன, எனது கேரக்டர் எப்படிபட்டது என்பதை எல்லாம் இப்போது சொல்ல முடியாது. நேரம் வரும்போது சொல்வேன்," என்றார்.
இலியானாவின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவியுள்ளன. இதுகுறித்து அவர் கூறுகையில், "தோல்விக்கான காரணத்தை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு படத்திலும் கஷ்டப்பட்டுதான் நடிக்கிறேன். சமீபத்தில் எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சலால் அவதிப்பட்டேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியுள்ளேன்.
ஷங்கர் இயக்கும் நண்பன் படப்பிடிப்பு அந்தமானில் நடந்தது. அங்கு நீண்ட தூரம் படகில் பயணம் செய்தோம். அது என் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாததால் காய்ச்சல் வந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர்,"
Thursday, May 26
நீண்ட தூரம் படகில் பயணம் செய்ததால் வந்த காய்ச்சல்
9:20:00 AM
No comments
புதிய இந்திப் படம் ஒன்றில் தாவூத் இப்ராகிம் காதலி மந்தாகினி வேடத்தில் இலியானா நடிப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)














0 Comments:
Post a Comment