இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Tuesday, May 31

ஷங்கருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் ?


எந்திரன் படக்கதைத் தொடர்பாக ‌தொடரப்பட்ட வழங்கில் இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளருக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கட்தில் ரஜினி, ஐஸ்வர்யா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ‘எந்திரன்’ படத்தின் கதை தனக்கு சொந்தமானது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் உரிமை கோரி எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

வழக்கு மனுவில் ஆரூர் தமிழ்நாடன் கூறியிருப்பதாவது: “நான் 1996ல் ஜுகிபா என்ற பெயரில் சிறுகதை எழுதினேன். அக்கதை இனிய உதயம் என்ற தமிழ் மாத இதழில் வெளியானது. இதே கதையை அந்த நிறுவனம் திக் திக் தீபிகா என்ற பெயரில் புத்தகமாக 2007ல் பிரசுரித்தது. அது புத்தக கண்காட்சிகளில் விற்பனையானது. அரசு நூலகங்களுக்கும் வாங்கப்பட்டன.

அந்த கதையை தழுவி இயக்குனர் ஷங்கர் எந்திரன் என்ற படத்தை எடுத்து வெளியிட்டு உள்ளார். எந்திரன் படத்தை பார்த்த என்னுடைய வாசகர்களும், நண்பர்களும், உங்களுடைய ஜூபிகா கதைக்கும், எந்திரன் படத்திற்கும் சில ஒற்றுமை உள்ளது என தெரிவித்தனர். பிறகு நானும் அப்படத்தைப் பார்தது அதிர்ச்சி அடைந்தேன்.

என்னுடைய கதையை அப்படியே காப்பி அடித்து படம் எடுத்துள்ளனர். பாடல் காட்சிகளையும், கிராப்பிக்ஸ் காட்சிகளையும் சேர்த்துள்ளனர். எந்திரன் படத்தின் கதையை 1977 – 98ல் புத்தகத்தில் படித்துள்ளதாகவும், அதனை படமாக எடுக்க இருந்ததையும் இயக்குநர் ஷங்கர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதையடுத்து ஷங்கர் மீதும் தயாரிப்பாளர் மீதும் மோசடி காப்புரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் அளித்தேன். அந்த கதையின் காப்புரிமை என்னிடமே உள்ளதென்றும் என்னிடம் அனுமதி பெறாமல் படம் எடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தினேன். ஆனால் தயாரிப்பாளர் பெயரை புகாரில் இருந்து நீக்கினால்தான் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று வாய்மொழியாக என்னிடம் தெரிவித்தனர். நான் மறுத்து விட்டேன். இதனால் புகார் முடித்து வைக்கப்பட்டது. எனவேதான் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளேன்” இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கை 13வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு சிவகுமார் விசாரித்தார். ஆரூர் தமிழ்நாடன் சார்பில் வக்கீல் எட்விக் ஆஜரானார். இந்த வழக்கில் ஜூன் மாதம் 24ம்தேதி இயக்குநர் ஷங்கரும், தயாரிப்பாளரும் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்ப மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...