இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Sunday, May 29

சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் சாம்பியன்!!!

சென்னை, மே. 29- ஐ.பி.எல். சீசன் 4 கோப்பையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருது சென்னை வீரர் முரளி விஜய் கைப்பற்றினார். கோப்பையை வென்ற சென்னை அணிக்கு 10 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.



ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதி தொடங்கியது. இதன் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- வெட்டோரி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது. முரளி விஜய் 52 பந்தில் 95 ரன்னும் (4 பவுண்டரி, 6 சிக்சர்), மைக் ஹஸ்சி 45 பந்தில் 63 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.


பின்னர் விளையாடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்னே எடுத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 58 ரன்னில் வென்று ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. சவுரவ் திவாரி அதிகபட்சமாக 42 ரன்னும், டிவில்லியர்ஸ் 35 ரன்னும் எடுத்தனர். அஸ்வின் 3 விக்கெட்டும், ஜகாட்டி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

ஐ.பி.எல். கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து 2-வது முறையாக கைப்பற்றியது. கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. ஐ.பி.எல். கோப்பையை 2 முறை கைப்பற்றிய முதல் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான், டெக்கான் தலா ஒரு முறை வென்றுள்ளன. சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

பெங்களூர் அணி 2-வது முறையாக இறுதிப் போட்டியில் தோற்றது. 2009-ம் ஆண்டு டெக்கானிடம் அந்த அணி தோற்றது. பெங்களூர் அணிக்கு ரூ.7 1/2 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 3-வது இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ் 4-வது இடத்தை பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தலா ரூ.3.75 கோடி கிடைத்தது.

இந்த ஐ.பி.எல். போட்டியில் சிறந்த அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்த கிறிஸ் கெய்லுக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. அதிக ரன்களை எடுத்ததற்காக அவருக்கு ரூ.10 லட்சத்துடன் ஆரஞ்சு கலர் தொப்பி பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த பொழுதுபோக்கு வீரரருக்கான கோல்டன் விருதும் அவருக்கு கிடைத்தது. இதற்காக அவருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

இந்தப்போட்டித் தொடரில் சிறந்த கேட்சுக்கான விருது போலார்ட்டுக்கு கிடைத்தது. ரூ.10 லட்சம் பரிசை அவர் தட்டி சென்றார்.அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய மலிங்காவுக்கு (மும்பை இந்தியன்ஸ்) பர்பிள் கலர் தொப்பியும்) ரூ.10 லட்சமும் வழங்கப்பட்டது. அவர் சர்பில் அந்த அணியை சேர்ந்த போலார்ட் பெற்றுக்கொண்டார்.

சிறந்த தனிநபர் ஆட்டத்துக்கான விருது பஞ்சாப் வீரர் வல்தாட்டிக்கும், வளர்ந்து வரும் இளம் விரருக்கான விருது கொல்கத்தா இக்பால் அப்துல்லாவுக்கும் கிடைத்தது.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...