
இலியானாவை வைத்து இப்போது ஐந்து படங்களின் ஷட்டிங் போய் கொண்டிருக்கிறது. இது ஆந்திரா நிலவரம். தமிழ்நாட்டிலும் நண்பன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அவர்.
இப்படி பிசியாக இருக்கிற நடிகைக்கு தொழில் தடை விதிக்கும் படி கேட்டால் சும்மாயிருப்பார்களா? கரித்துக் கொட்டுகிறார்களாம் ஆந்திரா தயாரிப்பாளர்கள்.
மோகன் நடராஜன் தயாரிக்கும் படத்தில் விக்ரமுடன் ஜோடி சேர முப்பத்தைந்து லட்சம் முன் பணமாக கொடுத்தார் அவர். ஆனால் கால்ஷீட்டும் தரவில்லை, அட்வான்சையும் திருப்பி தரவில்லையாம் இலியானா.
அதை கேட்டு அலைந்த மோகன் நடராஜன்தான் அத்தனை மொழிகளிலும் அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரினாராம். உங்க ஒரு படத்துக்காக நாங்க நஷ்டப்படணுமா? வேணும்னா புதுப்படத்தில் நடிக்க தடை விதிச்சுக்கங்க.
எடுக்கிற படத்தில் இடையூறு செய்யாதீங்க என்றார்களாம் ஆந்திராவில். மீண்டும் பிரச்சனை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்













0 Comments:
Post a Comment