இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Wednesday, May 18

கண்டேன் இயக்குனருடன் கூட்டணி சேரும் விஜய்

தற்போது “கண்டேன்” என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் முகில் என்பவர் தான் விஜய்க்கு ஒரு கதை சொல்லி அவரை அசத்தியிருந்தாராம்.

ஆர்.பி.சௌத்ரி இந்த கதையை கேட்டுவிட்டு உடனே முன்பணம் கொடுத்திருந்தார்.

ஒரு பக்கம் பணம் ரெடி. ஏனென்றால் தயாரிப்பாளர் கடன் வாங்கி படம் எடுக்க வேண்டிய நிலையில் இருப்பவர் அல்ல. இன்னொரு பக்கம் ஹீரோ ரெடி. விஜய் யார் பேச்சை கேட்டும் கதை நன்றாக இருக்கு என்று சொல்பவரல்ல. அப்படியிருந்தும் இந்த கதையை படமாக்குகிற யோகம் மட்டும் முகிலுக்கு வரவே இல்லை. என்னென்னவோ காரணத்தால் படத்தை ஆரம்பிக்க தாமதம் ஏற்பட்டுக் கொண்டே வந்ததாம்.

இனிமேல் காத்திருந்தால் ஆகாது என்று நினைத்தவர் சட்டென்று கிளம்பி சாந்தனுவை சந்தித்து வேறு கதையை சொன்னாராம். அவ்வளவு தான் புதிய தயாரிப்பாளர் ஒருவர் பணம் போட முன் வரவும் படப்பிடிப்புக்கு கிளம்பி படத்தையும் முடித்துவிட்டார்.

கண்டேன் பார்த்து விட்டு விஜய்யும் சௌத்திரியும் மீண்டும் பழைய கூட்டணியை தொடர்வார்களா.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...