இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Thursday, May 19

தமிழ்த் திரையில் ஈழக் கதைகள் நடிக்கும் விஜய்!

ஈழத்து கதைகள் சமீப காலமாக தமிழில் திரைப்படங்களாக வெளிவருவதில்லை. படங்கள் எடுக்கப்பட்டாலும் அரசாங்கம் அதனை வெளிகொண்டு வருவதற்கு தடை விதிக்கலாம் என்பதுவும் ஒரு காரணம்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருப்பதால் தமிழ் திரையுலகில் ஈழக்கதைகளை படமாக எடுக்கலாம் என்று கதை விவாதங்கள் நடந்து வருகின்றன.

சீமான் இயக்கத்தில், தாணு தயாரிப்பில், விஜய் ஈழ அகதியாக தமிழகத்துக்கு வந்து, படித்து டாக்டராகும் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் கதை 'பகலவன்'. இப்படத்தை எப்போது தொடங்கலாம் என்று யோசனையில் இருக்கிறார்கள். இதற்காக விஜய்யும் தனது கால்ஷீட் தேதிகளை புரட்டி கொண்டிருக்கிறார்.

இயக்குனர் ஜான் மகேந்திரன் இயக்க இருக்கும் ஈழமக்களின் முள்வேலி வாழ்க்கையை பற்றிய ஒரு கண்ணீர் கதையை இயக்க இருக்கிறார். தற்போது அவர் இயக்கி வரும் 'தலைப்புச் செய்திகள்' படத்திற்கு பிறகு அப்படத்தை தொடங்க இருக்கிறார். இந்தப் படத்தில் விஷால் ஒரு கௌரவக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார்
தங்கர் பச்சான் இயக்கி வெளிவர இருக்கும் 'களவாடிய பொழுதுகள்' படத்திற்கு பிறகு, மே 18 அன்று நடந்த சம்பவங்களை பின்னணியாக கொண்ட படமொன்றை எடுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

'தங்கமீன்கள்' படத்தை இயக்கி வரும் ராம் மற்றும் 'பொல்லாதவன்' வெற்றிமாறன் இருவரும் அடுத்து ஈழக்கதை ஒன்றை படமாக்க இருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...