இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Monday, May 23

நண்பன் இலியானாவின் இஷ்டம்!

ஆந்திராவில் இலியானாவுக்கான செல்வாக்கு எத்தனை பிளாப் கொடுத்தாலும் குறைந்ததே இல்லை. அவர் பற்றிய செய்திகளை ஆர்வமுடன் படிக்கிறார்கள் என்பதால் ஹீரோக்களின் அட்டை படங்களை விட இலியானாவின் படத்தை அட்டையில் போட்டு அமர்க்களமாக சம்பாதிக்கிறார்கள்.

இந்த நேரத்தில் அவர் ஒரு பேட்டிக் கொடுக்கப் போக, அது யாராக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதமே நடந்து வருகிறதாம். காதல் கல்யாணம்தான் சிறந்தது. வீட்டில் பார்க்கும் திருமணம் அதிர்ஷ்டம் இருந்தால்தான் நன்றாக அமையும். இல்லையென்றால் எதிர்காலமே கேள்விக்குறிதான்.

நாமே நேரடியாக பார்த்து பழகிய ஆண் திருமணத்திற்கு பிறகு மாறப்போவதில்லை. அதனால்தான் நான் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள நினைத்திருக்கிறேன்.

அவர் யார் என்பது எனக்கே தெரியாது. அவர் எங்குதான் இருக்கிறாரோ என்று கூறியிருந்தார் இலியானா. இவர் இப்படி சொன்னாலும், அந்த காதலர் யாராக இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்களாம் ரசிகர்கள்

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...