இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Saturday, May 7

இனிமேல் கௌரவ வேடத்தில் நடிப்பதில்லை: தனுஷ்

dhanush-and-vijay

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘3 இடியட்ஸ்’ படத்தினை, தமிழில் ‘நண்பன்’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் ரீமேக்கி வருகிறார். இப்படத்தில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, சத்யராஜ், ஜெனிலியா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் கெஸ்ட் ரோலில் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரவியது. இதைக் கேள்விப்பட்ட நடிகர் தனுஷ் இந்த செய்தியில் உண்மையில்லை, இது ஒரு ரூமர் செய்தி என்று டுவிட்டர் இணைய தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் தனுஷ் தெரிவித்துள்ளதாவது;

‘நண்பன் படத்தில் நான் கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன் என்பது ரூமர் செய்தியாகும். இப்படத்தில், கெஸ்ட் ரோலில் நடிக்கும்படி, இதுவரை யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. இனிமேல் எந்த படத்திலும், கெஸ்ட் ரோலில் நடிக்கக் கூடாது என்ற முடிவில் இருக்கிறேன்’ என்றிருக்கிறார்.

எல்லாம்

‘சீடன்’ தந்த பாடமா
தனுஷ்..?

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...