
தமிழகத்தில் வந்த ஆட்சி மாற்றத்தால் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளார் சங்கதிலும் மாற்றம் ஏற்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவராக இருந்த இயக்குநர் இராம.நாராயணன் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இவரைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பாளர் சங்கத் தலைவரானார்.
எஸ்.ஏ.சந்திரசேகரன் சங்க விதிகளுக்கு மாறாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பொதுக்குழு கூடி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை அவரது பதவிக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளரும் இயக்குனருமான பாபு கணேஷ் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகரன் தொடர இடைக்காலத் தடை விதித்துள்ளது.
Monday, May 30
எஸ்.ஏ.சி.க்கு இடைக்காலத் தடை
9:49:00 PM
No comments
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரின் தலைவர் பதவிக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது நீதிமன்றம்.
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment