இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Sunday, May 1

15 வில்லன்கள், 30 கொமெடியன்களுடன் விஜய்

வேலாயுதம் படத்தை இயக்கிய ராஜா, விஜய் ரசிகர்களுக்காக சுவாரஸ்யமான காட்சிகளை சேர்த்து இயக்கியுள்ளார்.

மாஸ் நாயகனாக விஜய், ஹன்சிகா மற்றும் ஜெனிலியா இரு நாயகிகளுடன் நடித்துள்ளார். மேலும், படத்தில் சரண்யா மோகன், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், சத்யன், பாண்டியராஜன், சாயாஜி சிண்டே ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்கள்.

இளைய தளபதி விஜய் படத்தில் பால்காரராக வந்து, புலனாய்வு டிவி செய்தியாளரான ஜெனிலியாவிற்கு உதவி செய்கிறார். அதிர வைக்கும் வசனங்களும் தூள் பறக்குமாம்.

கெமெர்சியல் சினிமாவுக்கு உரிய அனைத்து சமாச்சாரங்களும் இந்த படத்தில் இருக்கும். அண்ணாமலை பட ரஜினி மாதிரி கதாபாத்திரத்தில் வித்தியாசமாக விஜய் நடித்துள்ளார்.

இது வரையில் சுமார் எண்பத்தைந்து சதவீதம் அளவு படத்தை எடுத்துள்ளோம். படம் அமர்க்களமாக வர நிறைய செலவு செய்துள்ளார் படத்தயாரிப்பாளர். பாடல் காட்சியை படமாக்கவே சில கோடிகள் கரைந்துள்ளது. இன்னும் சில பாடல்களை ஐரோப்பாவில் படமாக்க திட்டமிட்டுள்ளோம்.

படத்தில் விஜயுடன் பதினைந்து வில்லன்கள், முப்பது கொமெடியன்கள் நடித்துள்ளார்கள். ஐந்து பாடல்கள், ஆறு சண்டைக்காட்சிகள் உள்ளன. ரசிகர்களின் ரசனைக்கு விருந்தாக இருக்கும்.

படத்தில் விஜய், சரண்யா மோகன் இருவரின் நடிப்பில் அண்ணன், தங்கை பாச உணர்வை பார்க்கலாம். ஜெனிலியாவுக்கு இப்படத்தில் முக்கியமான பங்கு.

ஹன்சிகா, விஜய்யின் காதல் நாயகியாக வருகிறார். சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், விஜய் மூன்று பேரும் கொமெடி காட்சியில் கலக்கியதை பார்த்த ஒட்டு மொத்த குழுவும் கலகலவென சிரித்து குதித்தது. விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் நிச்சயம் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும்.

விஜய், தமிழ் சினிமாவின் தலைசிறந்த நாயகன் என 'வேலாயுதம்' படத்தின் மூலமாக நிரூபித்து காட்டுவார். அவர் சாதாரண ரசிகரையும் புரிந்து வைத்துள்ளார். எதிலும் தலையிடாமல் அமைதியாக நடித்து கொடுப்பவர்தான் விஜய் என்று 'வேலாயுதம்' படத்தின் இயக்குனர் ராஜா பேசியுள்ளாராம்

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...